பாவாடைராயனின் கருவறை, கல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம். |
வல்லம்படுகையில் சிவனை சிறையில் அடித்ததற்காக மனம் வருந்திய பாவாடைராயன், அதனால் ஏற்பட்ட சிவா நிந்தனை நீங்க, சிவபெருமானிடமே உபாயம் வேண்டி நின்றான். அதை கேட்டு மனம் இறங்கிய ஈசன், வடக்கில் ஆதிபுரிக்கு (தற்போதைய திருவொற்றியூர்) அருகே, பனஞ்சாலை என்ற தலம் ஒன்று உள்ளது. அங்கு பனைமர நிழலில் காளி தேவி, அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அங்கே சென்று நீ அவளுக்கு காவல் செய்தால் சிவ நிந்தனை அகலும் என்று கூறினார்.
அதை கேட்ட பாவாடைராயன், பனஞ்சாலையை அடைந்தான். அங்கே தடாகமும், அதில் மலர்களம் செழித்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அந்தத் தடாகத்தில் நீராடி, பயபக்தியோடு காளியை வணங்கச் சென்றான்.
சிவன் கூறியபடி, பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலை கேட்டு மகிழ்ந்து, அந்தத் திசையை நோக்கி வணங்கினான். காளியும் ஆசி வழங்கினால். அதனால், பாவாடைராயன் தமது படை, பட்டாளம் என அனைவரையும் அழைத்து வந்து பனஞ்சோலையில் குடி அமர்த்தி, அங்கே காளிக்கு காவலனாகப் பனி செய்து கொண்டு வருகிறான்.
பாவாடைராயனும் அவனுடைய மக்கள் அனைவரும் குடிகொண்ட இடத்திற்கு பாவாடைராயன்புரம் என பெயர் உருவானது. அதுவே பின்னர் ராயன்புரமாக மாறி, பின்னர் ராயபுரமாக மாறியது.
காளி தேவிக்கு பாவாடைராயன் காவல் புரிந்த இடமே தற்போதய "கல்மண்டபனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம், சென்னை"
No comments:
Post a Comment