Pages

Sunday, 4 September 2016

ஆங்கிலேயரை அச்சுறுத்திய பாவாடைராயன்!

   
முத்துநாச்சியார் -அரியநாச்சியாருடன் பாவாடைராயன்,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை.

பாவாடைராயனின் வாகனமான வெண்குதிரை,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை.

     வல்லம்படுகை பரதேசியப்பர் ஆலயத்திற்கு சற்று தொலைவில் தற்போது ரயில் நிலையம் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் இவ்வழியே ரயில்பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அப்போது, கோயில் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில்பாதை அமைப்பதே அவர்களது திட்டமாக இருந்தது.

அதற்காக கோயிலை ஒட்டி, சற்று தூரம் வரை தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. மறுநாள் அங்கு வரும்போது, அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை அனைத்தும் பெயர்க்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டிருந்தன.

     அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வேறு திசையில் தூக்கி எறியப்பட்ட தண்டவாளங்கள் அனைத்தையும் மீண்டும் அதே இடத்தில் பதித்தனர். ஆனால் மறுபடியும் அந்த தண்டவாளங்கள் அனைத்தும் மீண்டும் பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டு கிடந்தன. அதனால்மீண்டும் அதிர்ச்சி அடைந்தாலும், தண்டவாளங்களை பாதிக்கும் பணியை கைவிடாமல் தொடர்ந்தனர்.

     ஆனால் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்ட முக்கிய பொறியாளர் ஒருவரின் கண்பார்வை பறிபோய் விட்டது. அதனால் அஞ்சிய ஆங்கிலேயர்கள், தமது திட்டத்தை கைவிட்டு, பாதையை மாற்றி கோயிலுக்கு சற்று தொலைவில் தண்டவாளத்தைப் பதித்தனர்.

     மேலும், செய்த தவறுக்காக, ஊர் மக்களின் ஆலோசனைப்படி பாவாடைராயனின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில், கோயிலுக்கு குதிரை சிலை ஒன்றை செய்து வைத்து அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டனர்.

     வல்லம் படுகையில், பரதேசியப்பரான சிவனுக்கு காவல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொலுவீற்றிருக்கும் பாவாடைராயன், அவருடைய கருவறையை இடிக்க விட்டு விடுவாரா என்ன? அவர் சிவனையே சிறையில் அடைத்தவர் அல்லவா ? 

No comments:

Post a Comment