வள்ளாலகண்டனை வதைத்த அங்காளபரமேஸ்வரி பாவாடைராயன்!

by - 08:21

ஓம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் பாவாடைராயன் துணை!
திலோதமை மீது பிரம்ம தேவன் மோகம் கொண்டான் .. ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள் .. வள்ளாலகண்டன் உடன் நான்கு மகன்கள் .. இவர்கள் வளர வளர மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல தொல்லைகள் கொடுத்து வந்தார்கள் .. இதை சரி செய்ய நாரதர், வள்ளாலகண்டனிடம் கலகம் செய்தார் .. இந்த உலகை தன் வசப்படுத்தி ஆள எண்ணினான் .. சிவ பெருமானை நோக்கி தவம் புரிந்தான் .. தவத்தை மெச்சி சிவபெருமானும் வள்ளாலகண்டனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் .. அவனோ .. சிவ பெருமானாகிய நீங்களே எனக்கு மகனாக பிறந்து, கைலாசத்தில் இறக்க வேண்டும் என்றான் .. அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார் ..
கணவனை இழக்க நேரிடுமோ என்று எண்ணிய பார்வதி தேவி, அண்ணன் பெருமாளிடம் வினவினாள் .. பெருமாளின் அறிவுரைப்படி கிழவியாக அங்காளபரமேஸ்வரியும், சிறு பாலகனாக பாவாடைராயனும் வள்ளாலகண்டனின்
மனைவிக்கு பிரசவம் பார்க்கும்படியானது .. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வள்ளாலகண்டனின் மனைவியின் வயிற்றை கிழித்து குடலை மாலையாக போட்டுகொண்டாள் அங்காளபரமேஸ்வரி .. அங்காளம்மனின் ஆணைப்படி விவரம் அறிந்து வந்த வள்ளாலகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை பாவாடைராயனும் வீரபத்திரரும் வெட்டி வீழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வு மயான கொள்ளையாக கொண்டாடப்படுகிறது .. அங்காளம்மனின் ஆவேசத்தை அடக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் தேரில் ஒவ்வொரு அங்கமாக இருந்து அம்மனை சாந்தப்படுத்துவதாக ஐதீகம்.
நன்றி : ஆரத்தி ஆடியோ!
பாடியவர்கள் : பம்பை செந்தில் தேவநாதன் கலை குழு!

You May Also Like

0 comments