Pages

  • Home
  • About
  • Contact
facebook twitter pinterest gplus instagram youtube

Pavadairayan பாவாடைராயன்

பாவாடைராயன் - குலதெய்வம் / காவல்தெய்வம். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுகிறார். பாவாடைராயன், பல குடும்பங்களுக்கும் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறார். பாவாடைராயனை பற்றிய வரலாறு, ஆலயங்கள், தகவல்கள், அல்லது புகைப்படங்கள் இருந்தால், எங்களிடம் பகிருங்கள். நன்றி. Whatsapp : 80562 66625 நன்றி.

     ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் மலேசியாவில் உள்ள கோலா செலங்கோர் என்னும் இடத்தில் 1991ஆம் ஆண்டு, ஆறுமுகம் தர்மலிங்கம் என்பவரால் சிறிய அளவில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அக்கோயில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     அதே போல், ஆண்டுக்கு ஒரு முறை, ஆடி திருவிழா, இக்கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆடி திருவிழாவின்போதும், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதமான சடங்குகளும், அப்படியே பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்திகொல்லுதல், கிடா வெட்டுதல் போன்ற சடங்குகளும் பக்தி பரவசத்துடன் மேற்கொள்ளப்படுகிறன.

     ஆலயத்தில், பாவாடைராயன் மூலவராக அருள்பாலிக்கிறார். பாவடைராயனுக்கு எதிரே கொல்லி மலை மாசி பெரியண்ணன்சாமியின் சூலம் வைக்கப்பட்டுள்ளது, அது தான் பாவாடைராயனுக்கு காவல் தெய்வமாக இருக்கிறது.

     மலேசியாவில், பெஸ்தாரி ஜெயா, கோலா செலங்கோர் என்ற இடத்தில் ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் அமைந்துள்ளது.
Share
Tweet
Pin
Share
No comments
   
முத்துநாச்சியார் -அரியநாச்சியாருடன் பாவாடைராயன்,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை.

பாவாடைராயனின் வாகனமான வெண்குதிரை,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை.

     வல்லம்படுகை பரதேசியப்பர் ஆலயத்திற்கு சற்று தொலைவில் தற்போது ரயில் நிலையம் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் இவ்வழியே ரயில்பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அப்போது, கோயில் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில்பாதை அமைப்பதே அவர்களது திட்டமாக இருந்தது.

அதற்காக கோயிலை ஒட்டி, சற்று தூரம் வரை தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. மறுநாள் அங்கு வரும்போது, அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை அனைத்தும் பெயர்க்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டிருந்தன.

     அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வேறு திசையில் தூக்கி எறியப்பட்ட தண்டவாளங்கள் அனைத்தையும் மீண்டும் அதே இடத்தில் பதித்தனர். ஆனால் மறுபடியும் அந்த தண்டவாளங்கள் அனைத்தும் மீண்டும் பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டு கிடந்தன. அதனால்மீண்டும் அதிர்ச்சி அடைந்தாலும், தண்டவாளங்களை பாதிக்கும் பணியை கைவிடாமல் தொடர்ந்தனர்.

     ஆனால் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்ட முக்கிய பொறியாளர் ஒருவரின் கண்பார்வை பறிபோய் விட்டது. அதனால் அஞ்சிய ஆங்கிலேயர்கள், தமது திட்டத்தை கைவிட்டு, பாதையை மாற்றி கோயிலுக்கு சற்று தொலைவில் தண்டவாளத்தைப் பதித்தனர்.

     மேலும், செய்த தவறுக்காக, ஊர் மக்களின் ஆலோசனைப்படி பாவாடைராயனின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில், கோயிலுக்கு குதிரை சிலை ஒன்றை செய்து வைத்து அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டனர்.

     வல்லம் படுகையில், பரதேசியப்பரான சிவனுக்கு காவல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொலுவீற்றிருக்கும் பாவாடைராயன், அவருடைய கருவறையை இடிக்க விட்டு விடுவாரா என்ன? அவர் சிவனையே சிறையில் அடைத்தவர் அல்லவா ? 
Share
Tweet
Pin
Share
No comments

பருதேசியப்பராக சிவன், பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம்,
வல்லம்படுகை, கடலூர் மாவட்டம்.


முதுநாச்சியார் - அறியனாச்சியாருடன் பாவாடைராயன்,
பரதேசியப்பர் பவடைராயர் ஆலயம், வல்லம்படுகை.
     பிரம்மனின் சாபத்தால்,பரதேசிக் கோலத்தில் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்து உண்டு வாழும் பிச்சாண்டவரான சிவபெருமான், தான் செல்லும் இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு வந்தார்.

     ஆனாலும், தன கையில் உள்ள கபாலத்தை எடுக்க முடியாத நிலையில்தான் அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்பவர்களும், அவருக்கு உணவு அளிப்பவர்களும், அவரை ஒரு பரதேசியாகவும், சாமியாராகவும் பார்த்தார்களே ஒழிய, அவர்தான் சிவன் என்பதை யாரும் அறியவில்லை.

     அப்படியே அவர் வந்து கொண்டிருக்கும் வழியில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வல்லம்படுகை என்ற ஊர் வந்தது. ஊர் அடங்கிய இருட்டு வேலை. அந்தப் பரதேசியை கண்ட ஊர்க்காவலன் பாவாடைராயன், அவரை சிறையில் அடைத்துவிட்டான்.

     அந்தப் பரதேசி,சிறையிலேயே இருக்கட்டும், காலையில் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து சென்று விட்டான்.

     இரவு முழுவதும் ஒய்வெடுத்து விட்டு காலையில் வந்து அங்கே பார்த்த காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. ஆகா, இது என்ன அற்புதக் காட்சி. இந்த கண்கள் காண்பது கனவா? என்று நாடு நடுங்கிப் போன பாவாடைராயன், சிவனின் சுய ரூபம் கண்டு அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

     உலகுக்கெல்லாம் அருள் வழங்கும், இந்த அபயக் கரங்களிலா விலங்கிட்டு சிறையில் அடைத்தேன். சிவபெருமானே, தாங்களை யார் என்று அறியாமல், நான் செய்த மாபெரும் தவறை மன்னித்து எனக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று சிவனிடம் மன்றாடி வேண்டினான்.

     மேலும், தாம் அடியவனாய் இருந்து பணிவிடை செய்ய தமக்கு அருள்புரிய வேண்டும் என்றும், சாபம் தீரும் வரை, ஈசன் அங்கேயே குடிகொள்ள வேண்டும் என்றும் பாவாடைராயன் மனமுருகி வேண்டினான்.

     பக்தனின் அன்பில் மெய் மறந்து எண்ணற்ற வரங்களை வாரி வழங்கும் ஈசன், பாவாடைராயனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டாரா என்ன? அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தான்.

     அதனால் வல்லம்படுகையில் எழுந்தருளியுள்ள ஈசன் பரதேசியப்பர் என அழைக்கபடிகிறார்.
   
     அங்கு, கையில் பிச்சை பாத்திரமாக கபாலத்தை மட்டுமே ஏந்திய பரதேசியப்பருக்கு, காவல் செய்பவராக பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார். கோயில் பிராரங்களில், விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் இருக்க, ஆலயத்தின் பின்புறத்தில், முத்துநாச்சியார், அறியனாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்- வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்.
   
Share
Tweet
Pin
Share
No comments


அங்காளம்மன் மடியில் குழந்தையாக பாவாடைராயன்,
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், சூளை, சென்னை.

காவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப்பு பாவாடைராயனுக்கு மட்டுமே உண்டு. பொதுவாக, காவல் தெய்வங்கள், பரிவார மூர்த்திகள் அனைத்தும் கோயில் பிரகாரங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மட்டுமே அமைக்க பட்டிருக்கும். சில காவல் தெய்வங்களுக்கு தனியாக ஆலயங்கள் கூட இருக்கிறது. ஆனால், பாவாடைராயனுக்கு மட்டுமே அங்காளபரமேஸ்வரியின் மடியில் குழந்தையாக அமர்ந்திருக்கும் சிறப்பு உண்டு. மேலும் அங்காளபரமேஸ்வரி, தமது மகனாகவே பாவாடைராயனை ஏற்றுக்கொண்டு தமது மடியில் இடம் கொடுத்துள்ளார்.

மேலும் விவரம் அறிய .. கீழே உள்ள  பாவாடைராயானின் வரலாறு LINK'ஐ பார்க்கவும் ..

பாவாடைராயன் வரலாறு !



மேலும், பாவாடைராயான் சிவனையே சிறை வைத்ததாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது ..


பருதேசியப்பராக சிவபெருமான்,
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம்,
வல்லம் படுகை, கடலூர் மாவட்டம்.

மனைவியர் முத்துநாச்சியார் - அறியனாச்சியாருடன் பாவாடைராயன், 
பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம்,
வல்லம் படுகை, கடலூர் மாவட்டம்.

                   மேலும், பாவாடைராயன் வல்லம் படுகையில் ஆட்சி புரிந்துவந்தார். அப்பொழுது சிவன் பிரம்மனின் சாபத்தால் ஊர் ஊராக பரதேசி கோலத்தில் திரிந்தார். அப்பொழுது, ஈசன் வல்லம் படுகை வந்தடைந்தார். வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறியாமல், பாவாடைராயன், இவன் ஏதோ வேற்றுநாட்டு உளவாளியாக இருப்பான் என்று ஈசனை சிறையில் அடைத்துவிட்டார்.

மேலும் படிக்க .. கீழே உள்ள LINK'ஐ பார்க்கவும் .. 

சிவனை சிறைவைத்த பாவாடைராயன்!







Share
Tweet
Pin
Share
No comments

pavadairayan
பாவாடைராயனின் கருவறை, கல்மண்டபம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம்.

          வல்லம்படுகையில் சிவனை சிறையில் அடித்ததற்காக மனம் வருந்திய பாவாடைராயன், அதனால் ஏற்பட்ட சிவா நிந்தனை நீங்க, சிவபெருமானிடமே உபாயம் வேண்டி நின்றான். அதை கேட்டு மனம் இறங்கிய ஈசன், வடக்கில் ஆதிபுரிக்கு (தற்போதைய திருவொற்றியூர்) அருகே, பனஞ்சாலை என்ற தலம் ஒன்று உள்ளது. அங்கு பனைமர நிழலில் காளி தேவி, அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அங்கே சென்று நீ அவளுக்கு காவல் செய்தால் சிவ நிந்தனை அகலும் என்று கூறினார்.
          அதை கேட்ட பாவாடைராயன், பனஞ்சாலையை அடைந்தான். அங்கே தடாகமும், அதில் மலர்களம் செழித்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அந்தத் தடாகத்தில் நீராடி, பயபக்தியோடு காளியை வணங்கச் சென்றான்.
சிவன் கூறியபடி, பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலை கேட்டு மகிழ்ந்து, அந்தத் திசையை நோக்கி வணங்கினான். காளியும் ஆசி வழங்கினால். அதனால், பாவாடைராயன் தமது படை, பட்டாளம் என அனைவரையும் அழைத்து வந்து பனஞ்சோலையில் குடி அமர்த்தி, அங்கே காளிக்கு காவலனாகப் பனி செய்து கொண்டு வருகிறான்.
          பாவாடைராயனும் அவனுடைய மக்கள் அனைவரும் குடிகொண்ட இடத்திற்கு பாவாடைராயன்புரம் என பெயர் உருவானது. அதுவே பின்னர்     ராயன்புரமாக மாறி, பின்னர் ராயபுரமாக மாறியது.
 காளி தேவிக்கு பாவாடைராயன் காவல் புரிந்த இடமே தற்போதய "கல்மண்டபனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம், சென்னை"
Share
Tweet
Pin
Share
No comments

காணவே ஜெபதபத்தி லிருந்துகொண்டுகருவான பிரணவத்தை வுச்சரித்தால்பூணவே ஏவல்பில்லி சூனியங்கள்பொல்லாத கறுப்பண்ணன் யேவல்சண்டிதோணவே பாவாடைராயன் காத்தன்தோறாத பிரணவத்தால் எல்லாஞ்சித்திவேணதொரு மாடனது வசியத்தாலேவெட்டவெளி தேவதைகள் கைக்குள்ளாச்சே.

                        - போகர் 7000 சப்த காண்டம் 5615 ஆம் பாடல்

Share
Tweet
Pin
Share
No comments

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் பாவாடைராயன். தமிழக கிராம புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில் குறிப்பிடத்தக்கது பாவாடைராயன். பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரியின் மகனாக போற்றப்படும் தெய்வமும் இதுவே ஆகும். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் அன்னையின் மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பு பெற்ற ஒரே காவல் தெய்வம் பாவாடைராயன் மட்டுமே.

தொன்மம்


புராண காலத்தில் உலகை ஆளும் சக்தி தேவி, பார்வதியாக அவதாரம் எடுத்தார். அப்போது சிவபெருமானை போலவே படைப்பு கடவுளான பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் குழம்பிய பார்வதி தேவி, தமது கணவர் சிவபெருமான் என்று நினைத்து பிரம்மனின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பின்னர், உண்மையை அறிந்து வருந்திய பார்வதி, பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருப்பதனால் தானே இந்த குழப்பம் என்று எண்ணி, சிவனை வணங்கி, பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்து விடுமாறு வேண்டினாள். அதை ஏற்று சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கொய்துவிட்டார். பிரம்மன், ஒரு பிராமணன் என்பதால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. மேலும், நான்கு தலையுடன் இருந்த பிரம்மன், தன்னுடைய ஐந்தாவது தலை சிவனின் கைகளிலே ஒட்டி கொள்ளட்டும் என்றும், பரதேசி கோலத்தில் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றும் சாபம் அளித்தார். அந்த சாபத்தினால், சிவன் பரதேசி கோலத்தில் ஊர் ஊராக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து உண்டார். எனினும், அவருக்கு கிடைக்கும் பிச்சை உணவில் பாதியை, அவர் கையில் ஒட்டி இருந்த பிரம்மனின் தலையான கபாலம் உட்கொண்டுவிடும். இதனால் சிவன் கடும் பசியுடனும், கையில் ஒட்டி கொண்ட கபாலத்துடனும் ஊர் ஊராக சுடுகாடு முழுவதும் அலைந்து திரிந்து சாம்பலில் படுத்து உறங்கினார்.

பாவாடைராயன் தோற்றம்


அந்த கால கட்டத்தில், கல்விக்காடு என்ற க்ஷேத்ரத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன். பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளை சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடி மக்களுக்கு வழங்கி ஆட்சி புரிந்து வந்தான். எல்லா செல்வங்களையும் பெற்றிருந்த பெத்தாண்டவனுக்கு, தமது குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆகவே, அவனும் அவனது மனைவி பெத்தாண்டச்சியும், தங்களுக்கு குழந்தை வேண்டி தினமும் சிவனைப் பிரார்த்தித்து வந்தனர். அப்போது ஒரு நாள், பரதேசி கோலத்தில் திரிந்து கொண்டிருந்த சிவன், அவர்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை வேண்டினார். வந்திருப்பவர் சிவன் என்று பெத்தாண்டச்சிக்கு தெரியவில்லை. ஆனாலும் பரதேசி வடிவத்தில் இருந்த சாமியார் முகத்தில் இருந்த சிவ கலையை கண்டாள். உடனே தங்கள் குலம் தழைக்க புத்திர பாக்கியம் வேண்டுமென அவரிடம் வேண்டினாள். அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து, விபூதியை பிரசாதமாக வழங்கிய சிவன், அதை உண்டால். உங்கள் குலம் தழைக்க ஒரு புத்திரன் பிறப்பான், அவனால் உங்கள் வம்சம் புகழ் அடையும், அவனும் உலகப்புகழ் பெற்றவனாக விளங்குவான் என்றும் ஆசீர்வதித்து சென்றார்.
சிவனின் வாக்குப்படி, சிறிது காலம் கழித்து பெத்தாண்டவன் - பெத்தாண்டச்சி தம்பதிக்கு அழகும், தேஜசும் நிறைந்த ஆண் புத்திரன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு தங்கள் ஊரை காப்பவன் என்று பொருள்படும், "கல்விகாத்தான்" என்ற பெயரை சூட்டி, பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுக்கு கல்வி,கலை,மற்றும் வீர விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. அவன், அவை அனைத்திலும் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தான் . அவனுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன், அவனை அழைத்த தந்தை பெத்தாண்டவன், தமக்கு வயதாகிவிட்டதால், தம் மக்களை காப்பதற்காக, நீ நமது குலத்தொழிலை ஏற்றுகொள்ள வேண்டுமென பணித்தான். ஆனால், கொள்ளை அடிப்பது, குடிகளை சாய்ப்பது, உயிர்களை கொல்வது போன்ற பழி நேரும் தொழில்களை செய்வதற்கு கல்விகாத்தானுக்கு மனமில்லை. ஆனாலும், தந்தையை எதிர்த்துப்பேச முடியாமலும், அவருடைய ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், வேறு வழியின்றி அங்கிருந்து தப்பித்து கால் போன போக்கில் தலை தெறித்து ஓடினான்.

அங்காளியின் ஆணை


ஓடிக்கொண்டே இருந்தவன், தன்னுடைய எல்லைகளையெல்லாம் கடந்து அடர்ந்த வனப்பகுதிக்கு வந்துவிட்டான். சூரியன் மறைந்து, அப்பகுதி முழுவதும் இருள் ஆக்கிரமித்துவிட்டது. அது அம்மாவாசை இரவு என்பதாலும், காட்டு மிருகங்கள் எழுப்பிய சப்தத்தாலும் பயந்து நடுங்கி நின்றுகொண்டிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல், அவன் தவித்த பொழுது, கண்ணை பறிக்கும் ஜோதி ஒன்று அங்கே தக தகவென ஜொலித்து கொண்டிருப்பதை அவன் கண்டான். பயத்தில் கொள்ளிவாய் பிசாசாக இருக்குமோ என அவன் அஞ்சி கூக்குரலிட்டான். உடனே, அங்கிருந்து ஒரு பெண் குரல் ஒலித்தது, மகனே! அஞ்சாதே! நான் தான் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி! உனக்கு நான் துணை புரிவேன் என்றது. மேலும் இவ்வளவு காலமாக நான் இங்கே உனக்காகவே காத்து கொண்டிருந்தேன். உன்னால் எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது என்றும் சொன்னது.
அதாவது இன்று இரவு முடிவதற்குள், இங்கே எனக்கு நீ ஒரு ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சுத்த வீரனான உன்னால் மட்டுமே அது சாத்தியம் என்றாள் அங்காளபரமேஸ்வரி. உடனே அன்னையின் பாதங்களில் பணிந்து விழுந்த கல்விகாத்தான், தங்கள் ஆசியுடன் நான் அதை செய்தது முடிக்கிறேன் என்று உறுதி அளித்தான். அதன்படி, அன்னையின் ஆசியுடன் அந்த கடினமான பணியை தனது உயிரையும் பணயம் வைத்து செய்து முடித்தான் அதுவே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாக திகழ்கிறது.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்





இதனால் உள்ளம் குளிர்ந்த அன்னை அங்காளபரமேஸ்வரி, அவனிடம் இன்னும் ஒரு சோதனை வைத்தாள். அதையும் ஏற்ற கல்விகாத்தான் தன்னுடைய குடலையும் உள்நாக்கையும் பிடுங்கி அன்னை தமது கரத்தால் தொட்டு வைத்த பாவாடையில் சமர்ப்பித்தான். மேலும் அகம் மகிழ்ந்த அன்னை, அவனை தனது மகனாக ஏற்று தூக்கி முத்தமிட்டாள். அப்பொழுது அவனுக்கு அன்னையின் ஆங்கார சக்தி உடல் முழுவது பரவி தெய்வ அம்சம் கிடைக்க பெற்றான்.

குலதெய்வமான பாவாடைராயன்


பாவாடைராயன்.


அன்னையின் ஆணையை ஏற்று, ஒரே இரவில் பல சோதனைகளை சந்தித்து கல்விகாத்தான் கட்டிய கோயிலே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும். ஆலயத்தை கட்டி முடித்து, உள்நாக்கையும், குடலையும் அறுத்து அம்மன் வைத்த பாவாடையில் சமர்ப்பித்ததால். அவனது வீரத்தையும் தியாகத்தையும் கண்டு அகமகிழ்ந்த அன்னை அவனை மகனாக ஏற்று முத்தமிட்டு ஆங்கார சக்தி வழங்கியதுடன், அவனுக்கு பாவாடைராயான் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தாள். மேலும் நான் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் எனக்கு நீயே காவல் தெய்வமாக விளங்குவாய். என்னுடைய ஆலயத்தில் எல்லாம் உனக்கும் ஒரு சன்னதி இருக்கும். பக்தர்கள் உனக்கு ஆடு,கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு வழிபடுவார்கள். நீ பாமர மக்கள் பலருக்கு குல தெய்வமாக விளங்குவாய் என்றும் பாவாடைராயனுக்கு வரம் அளித்தாள்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தமது மனைவியரான முத்துநாச்சியார் மற்றும் அரியநாச்சியார் அம்மனுடன் அன்னையை நோக்கி அருள்பாலிக்கிறார்.
Share
Tweet
Pin
Share
21 comments
Pavadairayan
பாவாடைராயன்!
 
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts

பாவாடைராயன்

பாவாடைராயன்
பாவாடைராயன் - தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் ஆகும். அங்காளபரமேஸ்வரி அம்மனின் மகனாக போற்றப்படுபவர்.

recent posts

Powered by Blogger.

Blog Archive

  • ▼  2023 (1)
    • ▼  November (1)
      • ஓம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கருநிலம், செங்கல்பட்டு!
  • ►  2022 (1)
    • ►  November (1)
  • ►  2021 (1)
    • ►  July (1)
  • ►  2019 (9)
    • ►  July (9)
  • ►  2018 (5)
    • ►  June (3)
    • ►  March (2)
  • ►  2017 (1)
    • ►  December (1)
  • ►  2016 (8)
    • ►  September (6)
    • ►  August (2)

Featured post

பாவாடைராயன் - கடவுள் மடியில் இடம் பிடித்த ஒரே காவல் தெய்வம் !

அங்காளம்மன் மடியில் குழந்தையாக பாவாடைராயன், அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், சூளை, சென்னை. காவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப...

Popular

  • பாவாடைராயன் வரலாறு!
    பாவாடைராயன் வரலாறு!
    தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் பாவாடைராயன். தமிழக கிராம புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில...
  • Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal Gramam, Chidambaram
    Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal Gramam, Chidambaram
    ஓம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், இடையன் பால் கிராமம், சிதம்பரம்! நன்றி : மு. கிருஷ்ணசாமி, மலேஷியா! Om Shree Pavadairayan Temple, Idaiyan Pal G...
  • பூவாணிக்குப்பம்  ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கடலூர்!
    பூவாணிக்குப்பம் ஸ்ரீ பாவாடைராயன் ஆலயம், கடலூர்!
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம்  பூவாணிக்குப்பம் ஊராட்சி தெற்கு பூவாணிக்குப்பம் கிராமத்தில் தேவராஜ் மகன் சக்திவேல், வைரக்கண்ணு அவர்க...
  • Om Sri Pavadairayan Photos at Melmalaiyanur Angalaparameswari Amman Temple!
    Om Sri Pavadairayan Photos at Melmalaiyanur Angalaparameswari Amman Temple!
    Om Sri Pavadairayan! Melmalaiyanur Angalaparameswari Amman Temple! Villupuram, Tamil Nadu.
  • பாவாடைராயன் பாடல் ..
    பாவாடைராயன் பாடல் ..
    அருள்மிகு ஸ்ரீ பாவாடைராயன் துணை "காவேரி, கொள்ளிடம் போல கள்ளு, சாராயம் கரைபுரண்டு வந்தாலும், உன் கடவாய்க்கு ஈடாகுமா என் அழகு...

Created with by ThemeXpose | Distributed By Gooyaabi Templates