Om Melmalayanur Angalaparameswari Pavadairayan Thunai !
Song : Kachai Varinthu Katti Pavadairayaa
Singer : Senthil Kumar Poosari
Song : Kachai Varinthu Katti Pavadairayaa
Singer : Senthil Kumar Poosari
Youtube Link : https://youtu.be/xHiJz56QHZ4
ஓம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் பாவாடைராயன் துணை!
திலோதமை மீது பிரம்ம தேவன் மோகம் கொண்டான் .. ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள் .. வள்ளாலகண்டன் உடன் நான்கு மகன்கள் .. இவர்கள் வளர வளர மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல தொல்லைகள் கொடுத்து வந்தார்கள் .. இதை சரி செய்ய நாரதர், வள்ளாலகண்டனிடம் கலகம் செய்தார் .. இந்த உலகை தன் வசப்படுத்தி ஆள எண்ணினான் .. சிவ பெருமானை நோக்கி தவம் புரிந்தான் .. தவத்தை மெச்சி சிவபெருமானும் வள்ளாலகண்டனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் .. அவனோ .. சிவ பெருமானாகிய நீங்களே எனக்கு மகனாக பிறந்து, கைலாசத்தில் இறக்க வேண்டும் என்றான் .. அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார் ..
கணவனை இழக்க நேரிடுமோ என்று எண்ணிய பார்வதி தேவி, அண்ணன் பெருமாளிடம் வினவினாள் .. பெருமாளின் அறிவுரைப்படி கிழவியாக அங்காளபரமேஸ்வரியும், சிறு பாலகனாக பாவாடைராயனும் வள்ளாலகண்டனின்
மனைவிக்கு பிரசவம் பார்க்கும்படியானது .. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வள்ளாலகண்டனின் மனைவியின் வயிற்றை கிழித்து குடலை மாலையாக போட்டுகொண்டாள் அங்காளபரமேஸ்வரி .. அங்காளம்மனின் ஆணைப்படி விவரம் அறிந்து வந்த வள்ளாலகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை பாவாடைராயனும் வீரபத்திரரும் வெட்டி வீழ்த்தினார்கள்.
மனைவிக்கு பிரசவம் பார்க்கும்படியானது .. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வள்ளாலகண்டனின் மனைவியின் வயிற்றை கிழித்து குடலை மாலையாக போட்டுகொண்டாள் அங்காளபரமேஸ்வரி .. அங்காளம்மனின் ஆணைப்படி விவரம் அறிந்து வந்த வள்ளாலகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை பாவாடைராயனும் வீரபத்திரரும் வெட்டி வீழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வு மயான கொள்ளையாக கொண்டாடப்படுகிறது .. அங்காளம்மனின் ஆவேசத்தை அடக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் தேரில் ஒவ்வொரு அங்கமாக இருந்து அம்மனை சாந்தப்படுத்துவதாக ஐதீகம்.
நன்றி : ஆரத்தி ஆடியோ!
பாடியவர்கள் : பம்பை செந்தில் தேவநாதன் கலை குழு!
Pavadairayan Song - Pavadairayan Avar Vaararu!
Album : Aadum Kali Angali
Produced by Apoorva Audio!
https://youtu.be/SjO7xMCWxRE
Lyrics, Music & Sung by Guru Sivakumar PoosariAlbum : Aadum Kali Angali
Produced by Apoorva Audio!
Om Sri Pavadairayan Kumba Poojai!
Sri Angalamman Temple.
Place : Ulundurpet Post Office, Villupuram, Tamil Nadu.
Sri Angalamman Temple.
Place : Ulundurpet Post Office, Villupuram, Tamil Nadu.
https://youtu.be/2kd6IwGvTh0
அருள்மிகு பரதேசியப்பர் பாவாடைராயன் ஆலயம், வல்லம்படுகை, கடலூர் மாவட்டம்!
பாவாடைராயன் சன்னதிக்கு 8-3-2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது!
நன்றி : கவிதை கணேசன்!
பாவாடைராயன் சன்னதிக்கு 8-3-2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது!
நன்றி : கவிதை கணேசன்!
https://youtu.be/alou2kueQT0
'PAVADAIRAYAN AYYA' song in Youtube!
Om Melmalayanur Angalaparameswari Pavadairayan Thunai ..
Song : Pavadairayan Ayya
Singer : Sakthi Shanmugaraja
Om Melmalayanur Angalaparameswari Pavadairayan Thunai ..
Song : Pavadairayan Ayya
Singer : Sakthi Shanmugaraja
Youtube Link : https://youtu.be/ORxFiaeHY1s
நன்றி : ஆரத்தி ஆடியோ
பாடியவர்கள் : பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு
பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியங்களை கொண்டு இசை அமைத்துள்ளனர்.
Link : https://youtu.be/4T4C2iUFe3s
ஓம் ஸ்ரீ பாவாடைராயன் துணை!
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம்!
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம்!
அங்காளம்மனுக்கு முன்காவல் பாவாடைராயன் |
அருள்மிகு அங்காளம்மன் |
பாவாடைராயன் |
அருள்மிகு அங்காளம்மன் |
அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முன்காவல் நிற்கும் எங்கள் அய்யன் பாவாடைராயன்!
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம்!
E.S.எழில்நகர், அரசூர் மெயின் ரோடு, பண்ருட்டி.
நன்றி : வேல்முருகன், பண்ருட்டி!
அருள்மிகு அங்காளம்மன் ஆலயம்!
E.S.எழில்நகர், அரசூர் மெயின் ரோடு, பண்ருட்டி.
நன்றி : வேல்முருகன், பண்ருட்டி!
Lord Aiyanar - Mounted on steed with three horns growing out of its head. He holds rein in left hand and a whip in right hand.
Lord Pavadairayan (on the right of Lord Ayyanar) and Goddess Puranai (one of the wives of Lord Ayyanar - statue is broken and missing), sits on the left side of Lord Ayyanar.
The statue is placed on the museum under section of Arts and culture of Asian, India.
Size of the statue - 13 inches!
Size of the statue - 13 inches!
About the Peabody Museum :
The Peabody Museum of Natural History at Yale University is among the oldest,
largest, and most prolific university natural history museums in the world. It was
founded by the philanthropist George Peabody in 1866.
Place : Yale Peabody Museum of Natural History, New Heaven, Connecticut, USA.
Courtesy : Collections of Yale Peabody Museum of Natural History
ஸ்ரீ பாவாடைராயன் |
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகல்கேணி அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்!
பாவாடைராயனுக்கு தனி சன்னதி!
ஸ்ரீ பாவாடைராயன் |
மயான கொள்ளை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது!
ஆலயம் : அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் -
93 , திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட், சென்னை - 44
செல் : 99400 42407
நாகல்கேணி அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் |
ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் மலேசியாவில் உள்ள கோலா செலங்கோர் என்னும் இடத்தில் 1991ஆம் ஆண்டு, ஆறுமுகம் தர்மலிங்கம் என்பவரால் சிறிய அளவில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அக்கோயில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதே போல், ஆண்டுக்கு ஒரு முறை, ஆடி திருவிழா, இக்கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆடி திருவிழாவின்போதும், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதமான சடங்குகளும், அப்படியே பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்திகொல்லுதல், கிடா வெட்டுதல் போன்ற சடங்குகளும் பக்தி பரவசத்துடன் மேற்கொள்ளப்படுகிறன.
ஆலயத்தில், பாவாடைராயன் மூலவராக அருள்பாலிக்கிறார். பாவடைராயனுக்கு எதிரே கொல்லி மலை மாசி பெரியண்ணன்சாமியின் சூலம் வைக்கப்பட்டுள்ளது, அது தான் பாவாடைராயனுக்கு காவல் தெய்வமாக இருக்கிறது.
மலேசியாவில், பெஸ்தாரி ஜெயா, கோலா செலங்கோர் என்ற இடத்தில் ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் அமைந்துள்ளது.
அதே போல், ஆண்டுக்கு ஒரு முறை, ஆடி திருவிழா, இக்கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆடி திருவிழாவின்போதும், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதமான சடங்குகளும், அப்படியே பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்திகொல்லுதல், கிடா வெட்டுதல் போன்ற சடங்குகளும் பக்தி பரவசத்துடன் மேற்கொள்ளப்படுகிறன.
ஆலயத்தில், பாவாடைராயன் மூலவராக அருள்பாலிக்கிறார். பாவடைராயனுக்கு எதிரே கொல்லி மலை மாசி பெரியண்ணன்சாமியின் சூலம் வைக்கப்பட்டுள்ளது, அது தான் பாவாடைராயனுக்கு காவல் தெய்வமாக இருக்கிறது.
மலேசியாவில், பெஸ்தாரி ஜெயா, கோலா செலங்கோர் என்ற இடத்தில் ஓம் ஸ்ரீ மஹா பாவாடைராயன் ஆலயம் அமைந்துள்ளது.
முத்துநாச்சியார் -அரியநாச்சியாருடன் பாவாடைராயன், பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை. |
பாவாடைராயனின் வாகனமான வெண்குதிரை, பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை. |
வல்லம்படுகை பரதேசியப்பர் ஆலயத்திற்கு சற்று தொலைவில் தற்போது ரயில் நிலையம் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில் இவ்வழியே ரயில்பாதை அமைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அப்போது, கோயில் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில்பாதை அமைப்பதே அவர்களது திட்டமாக இருந்தது.
அதற்காக கோயிலை ஒட்டி, சற்று தூரம் வரை தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. மறுநாள் அங்கு வரும்போது, அங்கு ஏற்கனவே பதிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்களை அனைத்தும் பெயர்க்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டிருந்தன.
அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வேறு திசையில் தூக்கி எறியப்பட்ட தண்டவாளங்கள் அனைத்தையும் மீண்டும் அதே இடத்தில் பதித்தனர். ஆனால் மறுபடியும் அந்த தண்டவாளங்கள் அனைத்தும் மீண்டும் பெயர்த்து எடுக்கப்பட்டு வேறு திசையில் தூக்கி எறியப்பட்டு கிடந்தன. அதனால்மீண்டும் அதிர்ச்சி அடைந்தாலும், தண்டவாளங்களை பாதிக்கும் பணியை கைவிடாமல் தொடர்ந்தனர்.
ஆனால் அந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்ட முக்கிய பொறியாளர் ஒருவரின் கண்பார்வை பறிபோய் விட்டது. அதனால் அஞ்சிய ஆங்கிலேயர்கள், தமது திட்டத்தை கைவிட்டு, பாதையை மாற்றி கோயிலுக்கு சற்று தொலைவில் தண்டவாளத்தைப் பதித்தனர்.
மேலும், செய்த தவறுக்காக, ஊர் மக்களின் ஆலோசனைப்படி பாவாடைராயனின் வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில், கோயிலுக்கு குதிரை சிலை ஒன்றை செய்து வைத்து அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டனர்.
வல்லம் படுகையில், பரதேசியப்பரான சிவனுக்கு காவல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொலுவீற்றிருக்கும் பாவாடைராயன், அவருடைய கருவறையை இடிக்க விட்டு விடுவாரா என்ன? அவர் சிவனையே சிறையில் அடைத்தவர் அல்லவா ?
பருதேசியப்பராக சிவன், பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம்படுகை, கடலூர் மாவட்டம்.
|
ஆனாலும், தன கையில் உள்ள கபாலத்தை எடுக்க முடியாத நிலையில்தான் அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்பவர்களும், அவருக்கு உணவு அளிப்பவர்களும், அவரை ஒரு பரதேசியாகவும், சாமியாராகவும் பார்த்தார்களே ஒழிய, அவர்தான் சிவன் என்பதை யாரும் அறியவில்லை.
அப்படியே அவர் வந்து கொண்டிருக்கும் வழியில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வல்லம்படுகை என்ற ஊர் வந்தது. ஊர் அடங்கிய இருட்டு வேலை. அந்தப் பரதேசியை கண்ட ஊர்க்காவலன் பாவாடைராயன், அவரை சிறையில் அடைத்துவிட்டான்.
அந்தப் பரதேசி,சிறையிலேயே இருக்கட்டும், காலையில் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து சென்று விட்டான்.
இரவு முழுவதும் ஒய்வெடுத்து விட்டு காலையில் வந்து அங்கே பார்த்த காட்சி அவனைத் திடுக்கிட வைத்தது. ஆகா, இது என்ன அற்புதக் காட்சி. இந்த கண்கள் காண்பது கனவா? என்று நாடு நடுங்கிப் போன பாவாடைராயன், சிவனின் சுய ரூபம் கண்டு அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.
உலகுக்கெல்லாம் அருள் வழங்கும், இந்த அபயக் கரங்களிலா விலங்கிட்டு சிறையில் அடைத்தேன். சிவபெருமானே, தாங்களை யார் என்று அறியாமல், நான் செய்த மாபெரும் தவறை மன்னித்து எனக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று சிவனிடம் மன்றாடி வேண்டினான்.
மேலும், தாம் அடியவனாய் இருந்து பணிவிடை செய்ய தமக்கு அருள்புரிய வேண்டும் என்றும், சாபம் தீரும் வரை, ஈசன் அங்கேயே குடிகொள்ள வேண்டும் என்றும் பாவாடைராயன் மனமுருகி வேண்டினான்.
பக்தனின் அன்பில் மெய் மறந்து எண்ணற்ற வரங்களை வாரி வழங்கும் ஈசன், பாவாடைராயனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டாரா என்ன? அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தான்.
அதனால் வல்லம்படுகையில் எழுந்தருளியுள்ள ஈசன் பரதேசியப்பர் என அழைக்கபடிகிறார்.
அங்கு, கையில் பிச்சை பாத்திரமாக கபாலத்தை மட்டுமே ஏந்திய பரதேசியப்பருக்கு, காவல் செய்பவராக பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார். கோயில் பிராரங்களில், விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் இருக்க, ஆலயத்தின் பின்புறத்தில், முத்துநாச்சியார், அறியனாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் பாவாடைராயன் எழுந்தருளியுள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்- வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்- வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்.
அங்காளம்மன் மடியில் குழந்தையாக பாவாடைராயன், அருள்மிகு அங்காளம்மன் ஆலயம், சூளை, சென்னை. |
காவல் தெய்வங்களிலேயே யாருக்கும் இல்லாத சிறப்பு பாவாடைராயனுக்கு மட்டுமே உண்டு. பொதுவாக, காவல் தெய்வங்கள், பரிவார மூர்த்திகள் அனைத்தும் கோயில் பிரகாரங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மட்டுமே அமைக்க பட்டிருக்கும். சில காவல் தெய்வங்களுக்கு தனியாக ஆலயங்கள் கூட இருக்கிறது. ஆனால், பாவாடைராயனுக்கு மட்டுமே அங்காளபரமேஸ்வரியின் மடியில் குழந்தையாக அமர்ந்திருக்கும் சிறப்பு உண்டு. மேலும் அங்காளபரமேஸ்வரி, தமது மகனாகவே பாவாடைராயனை ஏற்றுக்கொண்டு தமது மடியில் இடம் கொடுத்துள்ளார்.
மேலும் விவரம் அறிய .. கீழே உள்ள பாவாடைராயானின் வரலாறு LINK'ஐ பார்க்கவும் ..
பாவாடைராயன் வரலாறு !
மேலும், பாவாடைராயான் சிவனையே சிறை வைத்ததாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது ..
பருதேசியப்பராக சிவபெருமான், பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம் படுகை, கடலூர் மாவட்டம். |
மனைவியர் முத்துநாச்சியார் - அறியனாச்சியாருடன் பாவாடைராயன், பருதேசியப்பர் பாவாடைராயர் ஆலயம், வல்லம் படுகை, கடலூர் மாவட்டம். |
மேலும், பாவாடைராயன் வல்லம் படுகையில் ஆட்சி புரிந்துவந்தார். அப்பொழுது சிவன் பிரம்மனின் சாபத்தால் ஊர் ஊராக பரதேசி கோலத்தில் திரிந்தார். அப்பொழுது, ஈசன் வல்லம் படுகை வந்தடைந்தார். வந்திருப்பவர் சிவபெருமான் என்று அறியாமல், பாவாடைராயன், இவன் ஏதோ வேற்றுநாட்டு உளவாளியாக இருப்பான் என்று ஈசனை சிறையில் அடைத்துவிட்டார்.
மேலும் படிக்க .. கீழே உள்ள LINK'ஐ பார்க்கவும் ..
சிவனை சிறைவைத்த பாவாடைராயன்!
பாவாடைராயனின் கருவறை, கல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம். |
வல்லம்படுகையில் சிவனை சிறையில் அடித்ததற்காக மனம் வருந்திய பாவாடைராயன், அதனால் ஏற்பட்ட சிவா நிந்தனை நீங்க, சிவபெருமானிடமே உபாயம் வேண்டி நின்றான். அதை கேட்டு மனம் இறங்கிய ஈசன், வடக்கில் ஆதிபுரிக்கு (தற்போதைய திருவொற்றியூர்) அருகே, பனஞ்சாலை என்ற தலம் ஒன்று உள்ளது. அங்கு பனைமர நிழலில் காளி தேவி, அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். அங்கே சென்று நீ அவளுக்கு காவல் செய்தால் சிவ நிந்தனை அகலும் என்று கூறினார்.
அதை கேட்ட பாவாடைராயன், பனஞ்சாலையை அடைந்தான். அங்கே தடாகமும், அதில் மலர்களம் செழித்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அந்தத் தடாகத்தில் நீராடி, பயபக்தியோடு காளியை வணங்கச் சென்றான்.
சிவன் கூறியபடி, பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலை கேட்டு மகிழ்ந்து, அந்தத் திசையை நோக்கி வணங்கினான். காளியும் ஆசி வழங்கினால். அதனால், பாவாடைராயன் தமது படை, பட்டாளம் என அனைவரையும் அழைத்து வந்து பனஞ்சோலையில் குடி அமர்த்தி, அங்கே காளிக்கு காவலனாகப் பனி செய்து கொண்டு வருகிறான்.
பாவாடைராயனும் அவனுடைய மக்கள் அனைவரும் குடிகொண்ட இடத்திற்கு பாவாடைராயன்புரம் என பெயர் உருவானது. அதுவே பின்னர் ராயன்புரமாக மாறி, பின்னர் ராயபுரமாக மாறியது.
காளி தேவிக்கு பாவாடைராயன் காவல் புரிந்த இடமே தற்போதய "கல்மண்டபனம் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம், ராயபுரம், சென்னை"